ராகுலுக்கு லேசர் தாக்குதல்! காங்கிரஸ் புகாருக்கு புஃல் ஸ்டாப் வைத்த அமைச்சகம்!

1156

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் வந்துக்கொண்டிருந்தபோது, ராகுலை கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன. அமேதி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து விட்டு வந்தபிறகு ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. ராகுலை நோக்கி மீண்டும் லேசர் கதிர்கள் பாய்ந்தன. பச்சை நிறத்தில் வந்த அந்த லேசர் கதிர்கள் அவரது தலை மீது குறி பார்த்து வந்தன. எனவே இந்த விஷயத்தில் மத்திய உள்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், அவ்வாறு எந்த கடிதமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராகுல் மீது படர்ந்த பச்சை நிற ஒளி புகைப்படக்காரர் செல்போனில் இருந்து வந்தது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of