பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க துணிவிருக்கிறதா? – பிரதமர் மோடிக்கு ராகுல் சவால்

214

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க துணிவு உள்ளதா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ஆட்சிக்கு வந்ததிலிருந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தாமல் இருக்கும் பிரதமர் மோடிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து,

அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் துணிவு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். ஊழல் குறித்து துணிச்சலாக தன்னால் விவாதிக்க முடியும் என்று கூறிய அவர், பொய் மட்டுமே பேசும் மோடியால் அது முடியாது என்று தெரிவித்தார்.

பணமதிப்பு இழப்பு பிரச்சனையால், அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டதை மறந்துவிட முடியாது என்றார். பிரதமர் மோடி, குறிப்பிட்ட பத்திரிக்கையாளர்களை மட்டும் சந்தித்து பேசுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.