ஹெலிகாப்டரில் பழுது நீக்கிய ராகுல்! வைரல் வீடியோ!

1015

ஹிமாச்சல பிரதேசத்தில் நாளை 3 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி பிரசாரம் செய்ய ராகுல் காந்தி சென்றிருந்தார்.

அதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஹிமாச்சல பிரதேசத்தின் உனா பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் சிறிய பழுது ஏற்பட்டது.

இதையடுத்து ராகுல்காந்தியும் களத்தில் இறங்கினார். பாதுகாப்பு குழுவினருடன் இணைந்து ராகுல் காந்தியும் பழுதை நீக்கினார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

ராகுலின் இந்த செயல் குறித்து அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி ஒரு பைலட் என்பது குறிப்பிடத்தக்கது.