லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போகிறது – ராகுல்காந்தி

292

கொரோனா வைரசை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம்சாட்டி வருகிறார்.

அந்த வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.

அந்த ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் 10 குடும்பங்களில் 8 குடும்பங்கள் வருவாய் இழப்பைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள், குடும்பத்தினர் வருவாய் இழப்பால் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் நடுத்தர குடும்பத்தில் கீழ்நிலையில் வசிப்போர் அதிகமான வேலையிழப்பைச் சந்திப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை குறிப்பிட்டு ராகுல் தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் மோசமான பொருளாதார மேலாண்மையால், லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போவதாகவும், இது இனி அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of