நிதி செலுத்தியவர்களின் பெயர்கள்..! பிரதமர் பயப்படுவது ஏன்..? ராகுல் நறுக்..!

299

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், சீன நிறுவனங்களான ஹவாய், சியோமி, டிக்-டாக் மற்றும் ஒன்-பிளஸ் நிறுவனங்கள், பி.எம் கேர்ஸ்-க்கு பணம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் மோடி வெளியிடாவிட்டாலும், அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப் பட்டுள்ளதற்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, இந்த பெருமை முழுவதும் தாராவி மக்களையே சேரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மக்களை உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of