ராகுல் பயணித்த விமானத்தில் இயந்திர கோளாறு! வெளியான பரபரப்பு வீடியோ!

456

4-ஆம் கட்ட லோக்சபா தேர்தலையொட்டி ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை டெல்லியிலிருந்து பாட்னா செல்ல அவர் வழக்கமாக பயன்படுத்தும் தனியார் விமானத்தில் ஏறியுள்ளார். ஆனால் செல்லும் வழியில் திடீரென விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக டெல்லி விமான நிலையத்திற்கே விமானம் திரும்பி வந்து தரையிறக்கப்பட்டது.

இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதனிடையே, விமானத்திற்குள் நடைபெற்ற சம்பவங்களை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி ஷேர் செய்துள்ளார்.

இச்சம்பவம் காங்கிரஸ் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of