காங்கிரஸ் படுதோல்வி! ராகுல்காந்தி பதவி விலக திட்டம்?

616

கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி வெறும் 58 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்ட 2 தொகுதிகளில், வயநாட்டில் வெற்றியும், அமேதி தொகுதியில் தோல்வியும் அடைந்தார். கேரள மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜித்வாலா, ராகுல் ராஜினாமா செய்யப்போதவதாக பேச்சே எழவில்லை, அவ்வாறு பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Ravishankar Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Ravishankar
Guest
Ravishankar

Let Rahul remain. Who else is there for BJP to win next election in his absence? He is the best buffoon in congress party to help his opponents win. Things might be different in his absence. He is the best canvasser for BJP.