“மோடி” தொடர்ந்த மான நஷ்ட வழக்கு! தற்காலிகமாக தப்பித்த ராகுல்!

528

மக்களவை தேர்தல் பரப்புரையின் போது, மோடி என்ற குடும்ப பெயர் கொண்டுள்ள அனைவரும் திருடர்களாக ஏன் இருக்கிறார்கள் என ராகுல்காந்தி விமர்சித்திருந்தார்.

இதனை கண்டித்து பீகார் துணை முதல்வர் சுஷீல்குமார் மோடி, பாட்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நேரில் ஆஜரான ராகுல் காந்தி, ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

மோடியை எதிர்ப்பவர்கள் மீது வழக்குப் போட்டு துன்புறுத்தப்படுவதாகவும் கூறினார். அரசியல் சட்டத்தை பாதுகாத்து ஏழைகள் மற்றும் விவசாயிகள் நலனை காக்கவே தாம் போராடுவதாக கூறினார்.