3 நொடி விதி பற்றி தெரியுமா? செல்வராகவனின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்!

643

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படம் இம்மாத இறுதியில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் சாய் பல்லவி ஒரு நாயகியாகவும், மற்றொரு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியது பின்வருமாறு:-

“செல்வராகவன் மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார்.

அதேபோல், 3 நொடி விதி என்று ஒன்றை வைத்திருக்கிறார். நடிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், எடிட்டிங் செய்யும்போது காட்சி தெளிவாக வருவதற்கு ஒருவர் வசனம் பேசி முடித்ததும், மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக் கூடாது.

3 நொடிகள் தாமதித்துத்தான் ஆரம்பிக்க வேண்டும். ஒருவேளை அதை மறந்து விட்டு நடிக்க ஆரம்பித்தால், ‘கட்’ சொல்லி திரும்ப ஆரம்பிக்கச் சொல்வார். எத்தனை முறை ‘டேக்’ வாங்குகிறோம் என்று கணக்கு தெரியாது. முகத்தில் மட்டுமல்ல, உடலிலும் அந்த கதாபாத்திரம் வரும் வரை விடமாட்டார்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of