நான் திரும்பி சென்றால் என் குடும்பம் என்னை கொன்று விடும் – ரஹாஃப்

881

18 வயது ரஹாஃப் மொஹம்மத் அல்- குனன் என்ற பெண் தன்  குடும்பத்தோடு பயணம் செய்துக் கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து தப்பித்து தாய்லாந்து விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு தாய்லாந்து விமான நிலையத்தில் இருந்த செளதி அரேபியா காவலர்கள் பாஸ்போர்ட்டை பிடித்து வைத்து கொண்டனர்.

சொந்த குடும்பத்தாரால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் சவுதியிலிருந்து தப்பி வந்தேன் என அப்பெண் தெரிவித்தார்.  பின் தாய்லாந்து அதிகாரிகள் இது குடும்ப பிரச்சனை என்பதால் அவரின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப முயற்ச்சி செய்தது.

பின் அவர் தன் குடும்பத்திடமே தன்னை அனுப்பி வைத்தல் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் எனவும் தம்மை காப்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அந்த பெண் சட்டத்தை மீறியதற்காக தடுத்தோம் என விமான நிலைய அதிகாரிகளால் கூறப்படுகிறது.

பின் தாய்லாந்து நாடு அவரை திரும்பி அனுப்ப அவரது தந்தைக்கு தகவல் அளித்தது. பின் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ”என்னை அழைத்து போக என் தந்தை வந்திருக்கிறார். இது எனக்கு கவலை அளிக்கிறது.

ஆனால் ஐ.நா. முகமையின் பாதுகாப்பில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன். மேலும் எனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.இந்த பெண்ணில் தகவல் இணையத்தில் வந்ததால் தொடர்ந்து இணைய வாசிகளால் பேசப்பட்டு வருகிறது.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

 

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of