ரஹ்மான் Tweet: “அர்த்தம் கேட்ட ஹிந்தி வாலாஸ்!” பதில் சொன்ன “தமிழ் வாலாஸ்!”

2434

மாநிலக் கல்வியில் ஆங்கிலம், தாய் மொழி தவிர்த்து இந்தியையும் சேர்த்து மூன்று மொழி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டது.

இதற்கு தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

அதன்படி பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் இல்லை என்றாகிவிட்டது. இந்நிலையில் வரைவுத் திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதை அறிந்த ஏ.ஆர்.ரகுமான், அழகிய தீர்வு ‘தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு!’ என்று தூய தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

அவர் தமிழில் ட்வீட் செய்திருப்பதால் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டு இந்தி பேசுவர்கள் கமெண்ட் போட்டுள்ளனர். அதற்கு தமிழ் ரசிகர்களோ, நீங்க தமிழ்நாட்டில் பானி பூரியை விற்கலாம் இந்தியை அல்ல என்று கூறி கலாய்த்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of