ராகுல் சி.ஏ.ஏ. பற்றி 10 வரி பேச முடியுமா? நட்டா சவால்

238

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன.

போராட்டத்தின் அடுத்த கட்ட குறித்து ஆலோசிப்பதற்காக சமீபத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டத்தை காங். கூட்டியது.

இதற்கிடையில் காங். எம்.பி. ராகுலும் அவரது சகோதரியும் காங்.பொதுச் செயலாளருமான பிரியங்காவும் சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக தாக்கி டுவிட்டரிலும் பேட்டியிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நட்டா குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 10 வரிகள் பேச வேண்டும் என ராகுலுக்கு நான் சவால் விடுகிறேன்.

சிஏஏ பற்றி எதுவும் தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பேசுவது நாட்டிற்கு துரதிஷ்டவசமானது.

சிஏஏ.,வை எதிர்ப்பவர்கள் நாட்டை பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு நட்டடா கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of