கேப்டன் கோலியை புகழ்ந்து தள்ளும் டிராவிட்

451

ஆஸ்திரேலியா:- ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதுவரை நடந்து முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா,ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. மூன்றாவது போட்டி வருகிற டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை வெகுவாக பாராட்டி உள்ளார் முன்னாள் இந்திய வீரரும்,19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்.

இது குறித்து அவர் கூறியதாவது:- இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மிகச்சிறந்த வீரர். அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலும் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் கோலி.

சமீபத்தில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது.

அவருக்கு எதிராக பந்து வீசும் போது பந்துவீச்சாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் ராகுல் டிராவிட்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of