“ராகுல்காந்தி கொஞ்சம் பாத்து பேசுங்க” – எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்த சுப்ரீம் கோர்ட்..!

204

காவலாளியே திருடன் என உச்சநீதிமன்றமே கூறிவிட்டதாக பிரதமர் மோடியை கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. 

ராகுல்காந்தியின் பேச்சை எதிர்த்து அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் `ராகுல் காந்தி வருங்காலங்களில் இதுபோன்று பேசக்கூடாது; பார்த்து கவனமாக பேசவேண்டும் என எச்சரிக்கை விடுத்து, வழக்கை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.