ராகுல் எப்படி எம்.பில் பட்டம் பெற்றார்? அருண் ஜெட்லி

389

சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பெரியதாக பேசப்பட்டுவரும் ஒன்று என்றால் அது மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் கல்வி தகுதி தான். இந்த சர்ச்சையை எழுப்பியது காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி தான்.

இவர் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கல்வித்தகுதி பற்றி பல்வேறு புகார்களை கூறிவரும் நிலையில், தற்போது மத்திய நிதி மத்திய அருண் ஜெட்லி அந்த சர்ச்சையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் கூறியது,

“ஒரு நாள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் பாஜக வேட்பாளர்கள் கல்வித் தகுதி பற்றியதாக இருக்கிறது. ஆனால் ராகுல் காந்தியின் கல்விச் சான்றுகளை தணிக்கை செய்தால் கிடைக்க வேண்டிய பதில்கள் ஏராளமாக இருப்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள்.

இவ்வளவு ஏன், அவர் முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? இந்தியாவின் எதிர்க்கட்சி பிரசாரம் செய்வதற்கான காரணத்தை வாடகைக்கு தேடும் நிலையில் உள்ளது.

அங்கு ஒரு தலைவர் இல்லை, ஒரு நல்லுறவு இல்லை, குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லை, உண்மையான பிரச்சினைகள் இல்லை. ஆச்சரியமளிக்கும் வகையில் பிரசாரத்தை கேட்பவர்களும் இல்லை.

ரபேல் ஒப்பந்த பிரசாரம் – பொய், தொழில் அதிபர்களின் கடன் தள்ளுபடி – பொய், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி – மிகப்பெரிய பொய். ஒரு மாதம் பிரசாரம் செய்கிறார்கள், எதை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of