மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி பேரணியில் பலூன்கள் வெடித்து திடீர் தீ விபத்து

500

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணியில் பலூன்கள் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சத்தீஷ்கார், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஜபால்பூர் மாவட்டத்தில் 8 கிமீ தொலைவு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரை வரவேற்கும் விதமாக சாலை நெடுகிலும் கட்சி கொடிகளுடனும், வண்ண வண்ண பலூன்களுடனும் தொண்டர்கள் காத்து இருந்தனர்.

அப்போது சில தொண்டர்கள் ராகுல்காந்திக்கு ஆரத்தி எடுப்பதற்காக வாகனத்தை நோக்கி வந்தனர். ஆரத்தி எடுக்கும் போது நெருப்பு அருகில் உள்ள பலூன் மீது படவே தீ பற்றிக்கொண்டது. இதனால் பலூன் பட பட வென வெடித்து சிதறியது. ஆனால் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து ராகுல்காந்தி சற்றி தள்ளி இருந்தார். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீவிபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of