பாஸ்போர்ட் விவகாரம்.., ராகுல் காந்தி வேட்புமனுவுக்கு எதிராக புகார்

331

நடந்துக்கொண்டு இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிரைவடைந்துள்ள நிலையில், மீத முள்ள அனைத்து தொகுதிகளிலும் தலைவர்கள் அனைவரும் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டன் நாட்டு குடியுரிமை இருப்பதாக சுயேட்சை வேட்பாளர் அளித்த புகார் மீது அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி இன்று விசாரணை நடத்தவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இதே விவகாரத்தை சுட்டிக்காட்டி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நேற்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது வழக்கறிஞர் மூலம் வயநாடு தொகுதி தேர்தல் அலுவலருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ‘வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ராகுல் காந்தி இதுபற்றி தனது வேட்புமனுவிலோ, பிரமாணப் பத்திரத்திலோ எங்கும் குறிப்பிடவில்லை.

எனவே, அவரது வேட்புமனு ஏற்கப்படலாமா, அல்லது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமா? என்பது தொடர்பாக சீராய்வு செய்து முடிவெடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of