7 தமிழர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.., மனம் திறந்த ராகுல்

422

கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். லோக்சபா தேர்தலை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார்.

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்தும், இலங்கை பிரச்சனை குறித்தும் பேசினார்.

ராகுல் காந்தி தனது பேட்டியில், விவசாயிகளின் கடன்கள் ஆட்சிக்கு வந்த உடன் தள்ளுபடி செய்யப்படும். நாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நலனுக்காக பிரத்யேகமாக அமைச்சரவை தொடங்க உள்ளோம்.எனது தந்தை ராஜிவ் காந்தி கொலை என்பது எனது தனிப்பட்ட பிரச்சினையா?. ராஜிவ் காந்தி கொலை வழக்கு சட்டப் பிரச்சினை தொடர்பானது. நீதிமன்றம்தான், ராஜிவ் காந்தி கொலையாளிகள் விடுதலை பற்றி முடிவெடுக்க வேண்டும். சிறையில் இருக்கும் 7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை.

பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பது ஆணவம். நரேந்திர மோடி அரசை முடிவுக்கு கொண்டுவருவதுதான் எங்கள் நோக்கம். எதிர்க்கட்சிகள் வலிமையாக இணைந்து உள்ளன.இலங்கை படுகொலை விஷயத்திற்காக காங். மீது தமிழக மக்களுக்கு கோபம் இல்லை. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை. தமிழக மக்கள் மீது காங்கிரஸ் மிகுந்த அன்பு கொண்டுள்ளது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of