காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து – ராகுல் காந்தி

354

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக துபாய் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, துபாய் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

துபாயில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் சிந்தும் வியர்வை மற்றும் ரத்தத்தால் நாட்டை வளப்படுத்தி வருவதாக கூறினார்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

இதைதொடர்ந்து இந்திய -அரேபிய கலாச்சாரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of