ரபேல் போர் விமானம் ஊழல் நடைபெறவில்லை என்றால் விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?

774

ரபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடைபெறவில்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஏழைகளின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி, ஏழைகளிடம் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பறித்து, அனில் அம்பானியிடம் கொடுத்ததாக கூறினார்.

போகும் இடங்களில் எல்லாம் சொற்பொழிவு ஆற்றும் பிரதமர், ரபேல் விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேச மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் ரபேல் போர் விமான விவகாரத்தில், மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறும் அருண் ஜெட்லி, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பயப்படுவது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

Advertisement