காஷ்மீர் நிலைமையை பார்வையிட ராகுல் காந்தி ஹெலிகாப்டர் அனுப்ப தயார் – சத்யபால் மாலிக்

240

ராகுல் காந்தி காஷ்மீர் நிலைமையை பார்வையிட, அவருக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயார் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், வன்முறைகள் நிகழ்வதாக ராகுல் காந்தி கூறியது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார்.

காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ராகுல் காந்திக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயார் என்றும், அவர் காஷ்மீரின் உண்மையான நிலைமைய அறிந்து கொண்டு அதன் பின்னர் கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பக்ரீத் பண்டிகை, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டதாகவும் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.