ராகுல் வயநாட்டிலும் போட்டியிடுவது அமேதிக்கு செய்யும் அவமானம் – யோகி ஆதித்யநாத்

373

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டிலும் போட்டியிடுவது அமேதிக்கு செய்யும் அவமானம் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

நரேந்திர மோடி அரசு 5 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்பே, பிரதமர் பதவிக்கு தங்களின் முதல் விருப்பம் மோடிதான் என்று நாடு முழுவதும் மக்கள் கூறினர். தாக்குதலுக்கு பிறகு பா.ஜனதா மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஊடகங்களின் பார்வையும் மாறி உள்ளது. இந்த தேர்தலில், உத்தரபிரதேசத்தில் கடந்த முறை வெற்றி பெற்றதை விட அதிகமாக, அதாவது 74 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக வைத்துள்ளோம். அந்த அளவுக்கு வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டிலும் போட்டியிடுவது அமேதிக்கு செய்யும் அவமானம் ஆகும். அவர் பாதுகாப்பான தொகுதியை தேடுவதாக தெரிகிறது. பகுஜன் சமாஜ் கட்சி, இந்த தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது.

ராமர் கோவில் பிரச்சினை, எப்போதும் தேர்தல் விவகாரமாக இருந்தது இல்லை. அது நம்பிக்கை சார்ந்த விஷயம். நான் மோடியின் வருங்கால வாரிசு என்று கூறப்படுவதை ஏற்கவில்லை. அவர் எங்கள் தலைவர்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of