இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் எண்ணம் பாஜகவின் DNA-வில் உள்ளது – ராகுல் காந்தி

481

அரசு பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்தது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பாஜகவும், ஆர்எஸ்எஸும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான சித்தாந்தம் கொண்டவை என்று கூறினார்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தை மத்திய அரசு விரும்பவில்லை என்றும், இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் எண்ணம் பாஜக, ஆர்எஸ்எஸின் டி.என்.ஏ-வில் உள்ளது எனவும் அவர் சாடினார்.

இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி மற்றும் மோகன் பகவத்தின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்றும், அதனை நிறைவேற்ற விடமாட்டோம் எனவும் ராகுல் காந்தி உறுதிபட கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of