மோடி மண்ணில் முதல் முறையாக களமிறங்கும் ராகுல்

209

16 வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.ஒரு புறம் மத்தியில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகின்றனர். மற்றொரு புறம் இழந்த ஆட்சியை மீண்டும் கை பற்ற காங்கிரஸ் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாளை பிரச்சாரம் செய்யவுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைவர் பெருப்பெற்று முதல் முறையாக குஜராத் மாநிலத்திற்கு செல்வதால், அங்குள்ள காங்கிரஸ் பிரதிநிதிகள் இவரை சிறப்பாக வரவேற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறயுள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்த பிரச்சாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.