கேரளா வயநாட்டில் ராகுல் அபார வெற்றி

456

கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இ.கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி ராகுல் காந்தி 12 லட்சத்து 76 ஆயிரத்து 945 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி கனியை தொட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிர் 4 லட்சத்து 77 ஆயிரத்து 783 வாக்குகளை பெற்றார்.

பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 1 லட்சத்து 64 ஆயிரத்து 69 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of