தோல்வி பயத்தால் கேரளாவுக்கு ஓடும் ராகுல்.., பாஜக கிண்டல்

240

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டி இடுவதாக முன்பே அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று அவரே கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வ தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே அந்தோனி தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பாஜக-வினர் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசுகையில்,

உத்தரபிரதேச மாநிலம் நாகினாவில் பிரசாரம் செய்த அமித்ஷா பேசுகையில், “ராகுல் காந்தி கேரளாவை நோக்கி ஓடுகிறார் என வாட்ஸ்-அப்பில் படித்தேன். அவர் ஏன் கேரளாவிற்கு தப்பித்து ஒடுகிறார்? அவர் அமேதியில் என்ன செய்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது சந்தர்ப்பவாத முறையில் வெற்றிப்பெற கேரளாவிற்கு ஓடுகிறார்,” என விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of