அதற்கான வாய்ப்பை உருவாக்காதீர்கள் – ராகுல் எச்சரிக்கை | Jammu Kashmir

218

அண்மையில் மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும், காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, உள்பட பல அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரில் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தலைவர் வீட்டுச்சிறையில் உள்ள நிலையில், அந்த அரசியல் வெற்றிடத்தை பயங்கரவாதிகள் நிரப்ப அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகையால், மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசியல் வெற்றிடத்தில் பயங்கரவாதிகள் நுழையாமல் தடுத்து வீட்டுக்காவலில் உள்ள தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of