பிரதமர் மோடி தனது சுயநலத்திற்காக ரபேல் ஒப்பந்தத்தை மாற்றியுள்ளார்

776

ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கு பா.ஜ.க தலைமயிலான மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், இருகட்சிகள் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது.

இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஹாலண்டேவுக்கு நன்றி தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தற்போது பிரதமர் மோடி மீது நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரபேல் ஒப்பந்த ஊழலில் பிரதமர் மோடியின் முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டை ஏமாற்றியுள்ள பிரதமர் மோடி, இந்திய வீரர்கள் சிந்திய ரத்தத்தையும் அவமதித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement