பிரதமர் ஹெலிகாப்டர் சோதனை ! தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம், காங்கிரஸ் கண்டனம்

391

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி சென்றிருந்தார். அந்த மாநிலத்தில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் கர்நாடகாவை சேர்ந்த முகமது மோசின் எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார்.

இவர் மோடியின் ஹெலிகாப்டர் விதிமுறைகளுக்கு உட்பட்டதா என சோதனை மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரை மீறி இந்த சோதனையை முகமது மோசின் செய்தார். இதனால் மோடியின் பயணம் 15 நிமிடம் தாமதமானதாகக் கூறப்படுகிறது.

இது சட்டவிரோதமானது என அம்மாவட்ட ஆட்சியர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து முகமது மோசின் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்.

பிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மர்ம பெட்டி இறக்கப்பட்டதாக செய்தி வெளியானநிலையில், எல்லா ஹெலிகாப்டர்களிலும் சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். பிரதமரின் ஹெலிகாப்டருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டு, கடமையை செய்த தேர்தல் பார்வையாளரை தேர்தல் கமிஷன் இடைநீக்கம் செய்துள்ளது.

இதன்மூலம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதை விரும்பாத அளவுக்கு ஹெலிகாப்டரில் மோடி அப்படி என்ன கொண்டு சென்றார்? என்றும் வினைவியுள்ளனர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of