கடத்தல் பயமா..? இனி கவலையில்லை..! DSP-யின் மாஸ் ஐடியா!

434

சென்டரல் ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவிக்கப்படும் என்று ரயில்வே டி.எஸ்.பி. முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2வயது குழந்தை கடத்தப்பட்டு, மீட்கப்பட்டது குறித்து ரயில்வே டி.எஸ்.பி. முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்ததாக தெரிவித்தார். குழந்தையை பறிகொடுத்தவரும், கடத்தியவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

இனி சென்டரல் ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளை அடையாளம் காணுவம் வகையில், அவர்களது கையில் டேக் அணிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement