ரயில்வே ஊழியர்களுக்கு இந்தாண்டு 78 நாள் ஊதியத்தை போனாசாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு

878

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு இந்தாண்டு 78 நாள் ஊதியத்தை போனாசாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டும் அதே போன்று 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில்வே சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பான முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ரயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement