தமிழிலும் ரயில்வே தேர்வுகள் – மு.க.ஸ்டாலின் வரவேற்பு

395

ரயில்வே துறை சார்ந்த போட்டித் தேர்வான ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத தடையில்லை என்று ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.ரயில்வே துறையில் பதவி உயர்வுக்காக நடத்தப்படும் ஜிடிசிஇ தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இடம்பெற வேண்டும் ரயில்வே தேர்வு வாரியம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டு  இருந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் மாநில மொழிகளில் ஜிடிசிஇ தேர்வுகளை எழுத எந்த தடையும் இல்லை என்று  ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ரயில்வே வாரியத்தின் இந்த அறிவிப்பு திமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்காக திமுக தொடர்ந்து உறுதியுடன் போராடும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of