ஓடும் ரயிலில் சாகசங்களில் ஈடுபடுவது வீரம் அல்ல – பியூஷ் கோயல்

133

ஓடும் ரயிலில் சாகசங்களில் ஈடுபடுவது வீரம் அல்ல முட்டாள்தனம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர்  பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

சக பயணியால் டிக்டாக்கில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில், ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணித்த இளைஞர் பக்கவாட்டில்  திடீரென தவறி விழுகிறார்.

ரயிலின் அடியில் சிக்கிவிடுவது போல் விழுந்த அந்த இளைஞர் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் பிழைக்கிறார்.

இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஓடும் ரயிலில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவது வீரம் அல்ல முட்டாள்தனம் என்றும் அனைவரும் விதிகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of