பொங்கல் பண்டிகையையொட்டி, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

667

தமிழர் திருநாளான தைப் பொங்கல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வெளியூர்களில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

அவர்கள் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. அதன்படி ஜனவரி 11ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் ரயில் நிலைய கவுண்ட்டர்களிலும், ஆன்லைன் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதேபோல் ஜனவரி 12ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளையும், 13ஆம் தேதிக்கு நாளை மறுநாளும், 14ஆம் தேதிக்கு ஞாயிற்றுக்கிழமையும் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement