பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை! திருச்சியில் பரபரப்பு!!

265

திருச்சி கே.கே.நகர் சண்முகாநகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் மத்திய பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மகன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே மகனும் தற்கொலை செய்ததால் மகாலட்சுமி மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

இதற்கிடையே மகள் வித்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் திருமணம் செய்து கொடுத்தனர்.

இதனால் தனிமையில் இருந்த மகாலட்சுமிக்கு மகன் தற்கொலை செய்த அறைக்கு சென்று மகாலட்சுமி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் அவரது மகள் வித்யா புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.