மருத்துவ வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்.. அசத்தல் ஐடியா..

461

சீனாவின் வுகான் பகுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை உலக அளவில், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வருகிறது. மேலும், நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும் மருத்துவர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிராமப்பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வைரஸ் பரவல் ஏற்படும் சூழலில் ரயில் பெட்டிகள் மருத்துவ உதவிகளுக்குப் பயன்படுத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் பெட்டிகளை தனி மருத்துவ வார்டுகளாக மாற்றவும் புதிதாக வென்ட்டிலேட்டர்களை தயாரிக்கவும் உதவுவதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of