நடைமேம்பாலம் இடிந்து விபத்து 5 பேர் பலி.

284

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மும்பையின் முக்கிய பகுதியான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று அந்த நடைமேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரை உடனடியாக மீட்டு மும்பையின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாகவே நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of