வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னையில் ஆலோசனை கூட்டம்

840

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகை பின்புறம் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்று வருகிறது.

இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள், சுகாதாரம், பொதுப்பணி, சாலை, மெட்ரோ நிர்வாகம், ராணுவம், விமானப்படை, கடலோரப் பாதுகாப்புப் படை, ஆல் இந்திய ரேடியோ, வானிலை ஆய்வு மையம், பிஎஸ்என்எல், பெட்ரோலியம், உட்பட 40 துறை சார்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுப்பது, சாலைகளை சீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவ உதவிகள், தொலைத் தொடர்பு வசதிகள், ரானுவ நடவடிக்கைகள், வானிலை தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகள் என அனைத்து துறைகளின் ஆயத்த நிலை குறித்தும், செயல்படும் விதம் மற்றும் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மழை நீரி வடிகால் பணிகள் தூர்வாரும் பணிகள் முழு விச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் இன்னும் 15 நாட்ளில் அனைத்து பணிகளும் முடிவடையும் என்று கூறினார்.

2015- ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆங்கிலேயர் காலத்தில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் பகுதிகள் எல்லாம் கண்டறியப்பட்டு சரி செய்யப்படுகிறது எனவும் இதற்காக தமிழக அரசு 290 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது எனவும் கார்த்திகேயன் கூறினார்.

பாதுகாப்பு முகாம்கள், அத்தியவாசிய பொருட்கள், மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்படும்; மேலும் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என அவர் கூறினார்.

மேலும், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் கார்த்திகேயன் தெரிவித்தார்.

தற்போது பெரு மழைக்கான வானிலை எச்சரிக்கை விடுக்கபடவில்லை எனவே மக்கள் இது குறித்து பிதி அடைய வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.

Advertisement