6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்

608

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலைகள் இரண்டரை மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement