தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது

564

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. சென்னையில் நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

வெப்ப சலனம் மற்றும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை பெய்தது.

எழும்பூர், சேத்துப்பட்டு, சென்ட்ரல், ராயப்பேட்டை, அண்ணசாலை, வேளச்சேரி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை என சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.