வீடுகளுக்குள் புகுந்த மழைநீர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை

594

மதுரையில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரையில் பெய்த கனமழையின் காரணமாக, தபால் தந்தி நகர், செல்லூர், புதூர், பழங்காநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் நனைந்து நாசமாகி உள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement