காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை

565

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, விழுப்புரம், நாகை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.

சென்னையை பொறுத்தவரை காலையில் இருந்து வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், மாலையில் இருந்து கனமழை பெய்தது.

பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர்பாடி, வேப்பேரி, நுங்கம்பாக்கம், பெரியமேடு, புரசைவாக்கம் என சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இதேபோன்று சென்னையின் புறநகர் பகுதிகளான திருவெற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of