சென்னை உட்பட பல மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்

849

தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகல் நேரத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்த நிலையில், நள்ளிரவு கனமழை பெய்தது. வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி என சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதேபோன்று சென்னையின் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிரபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்தது.

Advertisement