தோனியைத் தொடர்ந்து இன்னொரு முக்கிய கிரிக்கெட் வீரர் ஓய்வு..!

838

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பதிவிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சுரேஷ் ரெய்னா, தோனியின் முடிவை தானும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தோனியுடன் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement