தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழை பெய்யும்

672

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்ததில் இருந்து, கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement