தென் தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

329
rain

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அரபிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக இலங்கை கடற்கரை வரை, வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.