கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்? | Rainfall

1432

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களிலும், வடகடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement