6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

665

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.