
நீலகிரி மாவட்டத்தில் காட்டுயானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மக்கள் வாழும் இடங்களில் நுழையும் யானை போன்ற வனவிலங்குகள் அப்பாவி மக்களை தாக்கி கொன்று வருகிறது. இந்நிலையில் நேற்று கீழ்கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை, கூட்டாடா தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து கெங்கரை , கூட்டாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலார்களை அச்சுறித்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என வனத்துறை சார்பில் தோட்ட தொழிலாளாகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யானைகளால் தக்கப்பட்ட உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்களை கோரிக்கை விடுத்துள்ளனர்.