பிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..!

622

சாமானிய மக்கள் முதல் திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் வரை பலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. சமீபத்தில் கூட, அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், பிரபல இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டுவீட் ஒன்றை ராஜமௌலி பதிவிட்டுள்ளார். அதில், சிறிது காய்ச்சலாக இருந்ததையடுத்து, கொரோனா டெஸ்ட் எடுத்தோம். அதில், பாதிப்பு இருப்பது உறுதியாகிவிட்டது.

எனவே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். பாகுபலி என்ற மிகவும் பிரம்மாண்டமான படத்தை எடுத்து, உலக அளவில் இந்திய சினிமாவை எடுத்து சென்றவர் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement